ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் முருகானந்தம் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தும் போது மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த என்னிடம் எந்தவித முன்னறிவிப்புமின்றி வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்தனர்.
மாவட்டச் செயலாளருக்கு தெரியாமல் வேட்பாளரை அறிவித்தது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. மேலும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீட்டெடுத்துள்ளார். எனவே ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டோம்.
ஓபிஎஸ் அணியில் இருக்கும் அனைவரும் விரைவில் அதிமுகவிற்கு வருவார்கள் என்று முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பில் அம்மா பேரவை ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ எல் தங்கராஜ் அதிமுக மருத்துவ அணி செயலாளர் மாவட்ட ஈரோடு மாவட்ட செயலாளர் டாக்டர் சிவமுருகன் அதிமுக ஈரோடு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ் ராஜமாணிக்கம் கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் இன்று ஓபிஎஸ் அன்னையிலிருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களை இணைத்துக் கொண்டனர்.
Post a Comment