திரிஷா விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை விளக்கம்!.. இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்!..
சமூகவலைத்தளங்களில் இன்று பரபரப்பாக பேசப்பட்ட விவகாரமே நடிகை திரிஷா பற்றி அதிமுக பிரமுகர் ஏவி ராஜு கொடுத்த பேட்டிதான். சமீபத்தில் இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். எனவே, முன்னாள் முதல் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல கருத்துக்களையும் கூறி வருகிறார்.
அப்போது கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்தபோது நடந்த விபரங்கள் பற்றி ஏவி ராஜு கூறும்போது ‘அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தோஷப்படுத்துவதற்காக நடிகைகளை கொண்டு வந்தனர். அதில் ஒருவர் நடிகை திரிஷா மீது ஆசைப்பட்டார். எனவே, திரிஷாவுக்கு 25 லட்சம் கொடுத்து கூட்டி வந்தனர். திரிஷா மட்டுமில்லாமல் பல நடிகைகளும் வந்தனர்’ என கொளுத்திப்போட்டார்.இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பற்றி எரிந்தது. நடிகை என்றால் கேவலமா? போகுற போக்கில் இப்படி பேசலமா? என பலரும் பொங்கினர். சிலரோ திரிஷாவை கிண்டலடித்து அதில் குளிர் காய்ந்து வருகிறார்கள். ஒருபக்கம், இயக்குனர் சேரன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு நடிகர் சங்கம் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சமூகவலைத்தளங்களில் இன்று பரபரப்பாக பேசப்பட்ட விவகாரமே நடிகை திரிஷா பற்றி அதிமுக பிரமுகர் ஏவி ராஜு கொடுத்த பேட்டிதான். சமீபத்தில் இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். எனவே, முன்னாள் முதல் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல கருத்துக்களையும் கூறி வருகிறார்.
அப்போது கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்தபோது நடந்த விபரங்கள் பற்றி ஏவி ராஜு கூறும்போது ‘அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தோஷப்படுத்துவதற்காக நடிகைகளை கொண்டு வந்தனர். அதில் ஒருவர் நடிகை திரிஷா மீது ஆசைப்பட்டார். எனவே, திரிஷாவுக்கு 25 லட்சம் கொடுத்து கூட்டி வந்தனர். திரிஷா மட்டுமில்லாமல் பல நடிகைகளும் வந்தனர்’ என கொளுத்திப்போட்டார்.
இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பற்றி எரிந்தது. நடிகை என்றால் கேவலமா? போகுற போக்கில் இப்படி பேசலமா? என பலரும் பொங்கினர். சிலரோ திரிஷாவை கிண்டலடித்து அதில் குளிர் காய்ந்து வருகிறார்கள். ஒருபக்கம், இயக்குனர் சேரன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு நடிகர் சங்கம் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவரை தொடர்ந்து பலரும் ஏவி ராஜுவை கண்டித்து வருகிறார்கள். ஏற்கனவே மன்சூர் அலிகான் பேசியதற்கே டிவிட்டரில் பொங்கிய திரிஷா இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறார் என பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு டிவிட்டரில் கருத்து தெரிவித்த ‘கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற நபர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். சம்பந்தப்பட்டவர் மிது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்த ஏவி ராஜு ‘நான் திரிஷா என சொல்லவில்லை. திரிஷா மாதிரி என்றுதான் சொன்னேன். ஜாலியாக பேசியதை குறிப்பிட்டேன். அதை ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டு வருகிறார்கள்’ என கூறியிருக்கிறார். ‘திரிஷா மாதிரி என்றால் மட்டும் தப்பில்லையா?.. திரிஷாவை சொல்லிவிட்டு இப்போது விஷயம் பிரச்சனை ஆனதும் கைதிலிருந்து தப்பிப்பதற்காக இப்படி விளக்கம் கொடுத்திருக்கிறார்’ என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
Post a Comment