Header Ads

சோனா வள்ளியப்பா ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய உதயமானசோனா வானொலி 89.6 துவக்க விழாவில் தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

சேலம் சோனா கல்விக் குழுமம் கல்வியில் மட்டுமல்லாது பலதுறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. சோனா கல்விக் குழுமத்தின் இணை நிறுவனமான வள்ளியப்பா ஃபவுண்டேஷன் புதிய உதயமான சோனா வானொலி 89.6 துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. 
சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா தலைமையிலும் துணைத்தலைவர், வள்ளியப்பா ஃபவுண்டேஷன் அறங்காவலருமான சொக்கு வள்ளியப்பா முன்னிலையிலும் நடைப்பெற்ற விழாவில் தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், எம்.எல்.ஏ.அருள், துணை மேயர் சாரதாதேவி, நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சோனா வானொலி 89.6 லோகோ-வை வெளியீட்டு விழாவை துவக்கி வைத்தனர்.
"வள்ளியப்பா அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.சொக்குவள்ளியப்பா கூறுகையில், இது ஒரு வித்தியாசமான வானொலி நிலையமாக இருக்கும்" என்கிறார். சோனா எஃப்எம் 89.6, ஒரு சமூக வானொலி, நவம்பர் 21 காலை முதல் ஒளிபரப்பாக உள்ளது, இது சேலம் மற்றும் ஏற்காடு பகுதியில் உள்ள 12 தாலுகாக்களில் உள்ள ஒரு மில்லியன் குடிமக்களுக்கு குரல் கொடுக்கிறது. இது தெற்கின் எஃகு நகரம் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் நிறைந்த பழங்கள், மசாலா மற்றும் காபி தோட்டங்களுக்கு பொருத்தமான மற்றும் உண்மையான பிரச்சினைகளை மையமாகக் கொண்ட உள்ளடக்கத்தை ஒளிபரப்பும். மேலும் உள்ளூர் கலாச்சாரம், இசை, விளையாட்டு மற்றும் வணிகத்தை மேம்படுத்த, சுகாதாரம், அரசு முயற்சிகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு பற்றிய இசை, முக்கிய தகவல்களின் பைட்டுகள் வரையிலான பயனுள்ள தகவல்களைப் பரப்புவதில் சோனா எஃப்எம் முக்கியப் பங்காற்றுகிறது, இது உள்ளூர் மக்களால் உள்ளூர் மக்களுக்காக உலகளாவிய பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதணைத்தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பேசும்பொழுது சோனா கல்விக் குழுமம் பல துறைகளில் வெற்றியாளர்களாக திகழ்ந்து வரும் நிலையில் தற்போது அதன் இணை நிறுவனமான வள்ளியப்பா ஃபவுண்டேஷனின் புதிய உதயமான சோனா வானொலி 89.6 துவக்கியுள்ளனர் இதிலும் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர் மேயர், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த விழாவில் அரசு அதிகாரிகள், சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜீ.எம்.காதர்நவாஷ் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments