Header Ads

புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு.

தமிழகத்தில் முதல் முறையாக உலக அளவிலான புத்தக கண்காட்சியை வரும் ஜனவரி மாதம் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார் சேலத்தில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு 



தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கு இணங்க இந்தியாவில் முதல் முறையாக உலக அளவிலான புத்தகக் கண்காட்சி வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் என்று தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்க தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவன் சார்பில் பிரம்மாண்ட புத்தகத் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 210 அரங்குகள் கொண்ட இந்த புத்தக கண்காட்சியின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்து ஒவ்வொரு அரங்காக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டு பதிப்பாளர்களுக்கும் நூல் வெளியீட்டாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செல்பி தளத்திற்கு சென்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த விழாவில் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வைரவன் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடத்திட சுமார் 5. 6 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி உள்ளதாகவும் இது தவிர இந்தியாவில் முதல் முறையாக உலக அளவிலான புத்தக கண்காட்சி நடத்திட உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வரின் உத்தரவிற்கு இணங்க வருகின்ற ஜனவரி மாதம் தமிழகத்தில் முதல் முறையாக உலக அளவிலான புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாகவும் புத்தக வாசிப்பை அனைவரிடமும் கொண்டு செல்லும் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் பேசினார்.

தொடர்ந்து விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, சென்னையில் முதல் முதலில் புத்தக கண்காட்சியை நடத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும் தற்போதைய தமிழக முதலமைச்சர் அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருக்கும் போது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயதுகளிலும் நூலகம் அமைத்திட உத்தரவு பிறப்பித்தார் என்றும், இது தவிர விழாக்களில் தனக்கு பொன்னடைக்கு பதிலாக புத்தகங்கள் கொடுக்க உத்தரவு பிறப்பித்து அந்த புத்தகங்களை தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கும் வழங்கி வருகிறார் என்றும் இதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்தில் முதல் முறையாக உலக அளவிலான புத்தக கண்காட்சியை நடத்திட ஜனவரி மாதம் நடத்திட உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றும், முத்தமிழ் அறிஞர் துவக்கி வைத்த புத்தக திருவிழாவை தமிழகம் முழுவதும் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றும், இந்த புத்தக திருவிழாவை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ் ஆர் பார்த்திபன், சின்ராஜ், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சேலம் வரலாற்றில் முதல் முறையாக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் இந்த கண்காட்சியில் தென்னிந்திய முழுவதும் இருந்தும் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்களை இலவசமாக அழைத்து வந்து புத்தக கண்காட்சியை பார்வையிட செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தகத் திருவிழாவில் புத்தக கண்காட்சி மட்டுமல்லாமல் குழந்தைகள் விளையாடுவதற்கான அரங்குகள் மற்றும் உணவகங்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments