எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தற்போது ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அங்கிருந்து விலகி இணைந்துள்ளனர்
சேலம் நெடுஞ்சாலை நகரில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தற்போது ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அங்கிருந்து விலகி இணைந்துள்ளனர்..
மாநில அம்மா பேரவை துணை செயலாளர் மயிலை டி.மாறன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், செய்தி தொடர்பாளருமான பொதிகை கே.பி.சாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஈ.உத்திரகுமார், திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஓபிஎஸ் அணியிலிருந்து இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவருடைய அணியில் இணைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சசிகலா அவர்களையும் தினகரன் அவர்களையும் அதிமுகவில் இணைக்க முயற்சியில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஈடுபட்டு வருகிறார். ஜெயலலிதா அவர்களின் சாவுக்கு காரணமான சசிகலா இணைப்பை நாங்கள் விரும்பவில்லை, அதனால் அங்கிருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முன்னிலையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment