Header Ads

சேலத்தில் புதிதாக சோனா குழுமத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையத்தில் சோனா மைசீலியம் பயோடெக் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை துவங்கியுள்ளது.

சோனா குழுமம் ஆஸ்திரேலியாவின் மைசீலியம் பயோடெக்னாலஜி உடன் இணைந்து சேலத்தில் புதிதாக சோனா குழுமத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையத்தில் சோனா மைசீலியம் பயோடெக் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை துவங்கியுள்ளது

தென்னிந்தியாவின் பன்முகப்படுத்தப்பட்ட சோனா குழுமம், ஆஸ்திரேலியாவின் மைசீலியம் பயோடெக்னாலஜி குழுமத்துடன் 50:50 கூட்டு முயற்சியில் சேலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையத்தில் சோனா மைசீலியம் பயோடெக் புரத ஆராய்ச்சியை முன்னெடுத்து உற்பத்தியை துவங்கியுள்ளது.

சோனா குழுமத்தின் துணைத்தலைவர் திரு.சொக்கு வள்ளியப்பாவின் இது பற்றி கூறுகையில், “மைசீலியம் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வு வழங்குவது குறித்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் முன்னோடி அமைப்பான ஆஸ்திரேலியாவின் மைசீலியம் பயோடெக் உடன் சோனா மைசீலியம் பயோடெக் கூட்டு முயற்சியை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டமைப்பு சோனா குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கட்டமைப்பை பயன்படுத்தி பரந்த அளவிலான ஐபி மற்றும் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் வலு சேர்க்கும் என்றார். 

மேலும், மைசீலியம் பயோடெக் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் புதுமையான தீர்வுகளுக்கு முன்னோடியாகவும் அறியப்படுகிறது. உலகளாவிய காளான் பயோடெக்னாலஜி, இது நகர்ப்புற காளான் வளர்ப்பு, விநியோகம் மற்றும் உலகளாவிய பங்குதாரர்கள் மூலம் உயிரி தொழில்நுட்பட்தை மேம்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது.சோனா மைசீலியம் பயோடெக் (MSB) என பெயரிடப்பட்டு சேலத்தில் உருவாக்காப்பட்டுள்ள இம்முயற்சி நானோடெக் ஆராய்ச்சி, ஐபி மேம்பாடு, சாறு உற்பத்தி, ரைத்தல், பாட்டில் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான ஒரு ஆராய்ச்சி வசதியை அமைத்து கொடுத்துள்ளது. உயர்தர காளான்களை ஆராய்ச்சி செய்து வளர்க்கும், மைசீலியம் புரதத்தைப் பிரித்தெடுத்து, FSSAI மற்றும் FDA சான்றிதழுக்கு இணங்க ஊட்டச்சத்து மருந்துகளை உற்பத்தி செய்யதல் என  சிறந்த உலகளாவிய உற்பத்தி நடைமுறைகளுடன் இணைந்து சேலத்தில் உள்ள சோனா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய காளான் ஆய்வகங்களில் ஒன்றாகக் MSB ஆய்வகம் உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றார். 

“ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே சேலத்தில் முதல் MSB வசதி தொடங்குவது மிகவும் பொருத்தமானதாக  அமைந்துள்ளது மேலும் இந்தியாவின் விவசாய வளம் மற்றும் விவசாய சமூகத்தை மேம்படுத்தும் எங்கள் ஆராய்ச்சி திறன் இரண்டையும் வளர்ப்பதற்கான வாய்ப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று மைசீலியம் பயோடெக்னாலஜி குழுமத்தின் தலைவர் வில்லியம் ஸ்காட் கூறினார்.

காளான்கள் அதிக அளவிலான ஊட்டச்சத்து" மற்றும் தாதுக்கள் வைட்டமின்களை வழங்கக்கூடிய மைசீலியத்திற்கான சிறந்த ஆதாரமாக உள்ளன. 5.1 மில்லியன் காளான் இனங்கள் ஆராய்ச்சி செய்யப்படுவதால் மருத்துவ குணம் கொண்ட உற்பத்தி காளான் தொழில் அதிவேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை துவங்கியுள்ள சோனா குழுமத்தின் துணைத்தலைவர் சொக்குவள்ளியப்பாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.வள்ளிய்பா கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் சோனா குழுமத்தின் ஆராய்ச்சி இயக்குனர் நிர்மலேஷ், முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜி.எம்,காதர்நவாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments