Header Ads

சேலத்தில் முதன்முறையாக தேசிய அளவிலான பூனைகள் கண்காட்சி..சேலத்தில் முதன்முறையாக தேசிய அளவிலான பூனைகள் கண்காட்சி.. காந்தி ரோடு TVN திருமண மண்டபத்தில் 29 ஆம் தேதி நடைபெறுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு..

சேலத்தில் முதன்முறையாக தேசிய அளவிலான பூனைகள் கண்காட்சி..


சேலத்தில் முதன்முறையாக தேசிய அளவிலான பூனைகள் கண்காட்சி.. காந்தி ரோடு TVN திருமண மண்டபத்தில் 29 ஆம் தேதி நடைபெறுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு..




 சேலத்தில் எப்போதும் இல்லாத அளவில் முதல் முறையாக பூனைகள் கண்காட்சி நடத்தப்படுவதாக ஹீரைரா அமைப்பின் நிர்வாகி மக்சு அகமது தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பிராணிகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது அது குறித்து விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவது குறித்து விழிப்புணர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த பூனை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கண்காட்சி ஒரு சமூக சேவைக்காகவும் விழிப்புணர்வுக்காகவும் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்

  வழக்கமாக வீடுகளை வளர்க்கப்படும் நாட்டு பூனைகளை போன்று அல்லாமல் வெளிநாடுகளில் வீடுகளில் குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படும் பூனைகள் அதிக அளவில் இந்த கண்காட்சிகள் இடம் பெற உள்ளது என்றும் பூனைகளின் அனைத்து சுபாவங்களும் நட்பு தன்மையும் உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாகவும் இந்த கண்காட்சியில் பெர்ஷன் பெங்கால் பைசர் உள்ளிட்ட 20 வகையான பூனைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது என்றும் இது தவிர தங்களை வீடுகள் வளர்க்கும் பூனைகளை காட்சிப்படுத்தலாம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

  வருகின்ற 29ஆம் தேதி காந்தி ரோடு பகுதியில் உள்ள டி வி என் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பூனை கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட பூனைகள் கண்காட்சியில் இடம்பெற உள்ளது என்றும் 5000 மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட போதுமான வசதி ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் பூனைகளுக்கான சிறிய அளவிலான போட்டிகள் இந்த கண்காட்சி நடத்தப்படுவதோடு சிறிய பூனைகளுக்கு தடுப்பூசி போடபடுவதோடு பூனைகளின் உடல் திறன் குறித்து தெரிந்து கொள்ள சிப் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

 அனைத்து பள்ளி குழந்தைகளும் இந்த கண்காட்சியை இலவசமாக கண்டு களிக்கலாம் என்றும் அனைத்து செல்ல பிராணிகளுக்கும் உண்டான உணவு மற்றும் அக்சஸரீஸ் சார்ந்த நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் உறுப்பினர்கள் அனிதா சௌடேஸ்வரி ஆகஸ்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments