ஆத்தூர் அருகே 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டு கன்று குட்டி தீணையப்பு துறையினர் உயிருடன் மீட்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் ஊராட்சிக்குட்பட்ட சிவகங்கைபுரத்தைச் சேர்ந்த வரதன் மகன் மகன் மணி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார் இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பசுமாடுகள் மற்றும் அதன் கன்றுகுட்டிகள் வீட்டின் அருகில் மேய்சலில் இருந்தபோது பசுமாட்டின் கன்று குட்டி துள்ளி விளையாடி கொண்டு இருந்த போது அருகில் ஊர் பொது கிணற்றில் கன்றுகுட்டி தவறி விழுந்துள்ளது இதையறிந்த மாட்டின் உரிமையாளர் மணி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கன்றுகுட்டியை உயிருடன் மீட்டு உரிமையாளர் மணியிடம் ஒப்படைத்தனர்,இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment