Header Ads

சேலத்தில் குடியரசுதின ஓவியப் போட்டியில், கால்களால் ஓவியம் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவன்.

சேலத்தில் குடியரசுதின ஓவியப் போட்டியில்,  கால்களால் ஓவியம் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவன்.......
                                                                  சாதனை படைப்பதற்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் ஊனமும் வயலும் தடை இல்லை என்பது பொதுவான கருத்து. அந்தக் கருத்தை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் சேலத்தில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தனது கால்களால் ஓவியம் வரைந்து அசத்தியது போட்டியில் கலந்து கொண்டவர்களையும் போட்டி நடத்துபவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 
சேலம் ஒய் எம் சி ஏ குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி 26.1.23 அன்று காலை ஓய் எம் சி ஏ வில் நடைப்பெற்றது.இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார்
300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்தார்கள்.பிரீகேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களை 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் துவங்கப்பட்டன போட்டி துவங்கியது முதல் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தங்களது கரங்களால் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைய தொடங்கினர்.

அப்பொழுது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் மற்றவர்களை கண்டு வேதனை படாமல் தனது கால்களால் ஓவியத்தை வரைய தொடங்கினார். இது சக போட்டியாளர்களையும் போட்டி நடத்துபவர்களிடையேயும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 


ஒவ்வொரு
பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கொடுத்து சிறப்பித்தார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு இந்த சங்கத்தின் பொருளாளர் நெல்சன் ஜெயக்குமார் தலைமை தாங்கினார் சேலம் மாவட்ட கல்வி அதிகாரி முனைவர் உதயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் 
சான்றிதழ்களும் வழங்கினார்.நிர்வாகக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வாழ்த்துரை வழங்கினார்
குணசீலன் முன்னிலை வகுத்தார் கோபி டிஜிட்டல் படங்களை தேர்வு செய்தார் பாண்டியராஜ் கலந்து கொண்டு குழந்தைகளை 
ஊக்கப்படுத்தி பேசினார்
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் ஓய் 
எம் சி ஏ பொதுச்செயலாளர் ஜோஸ் கவனித்து கொண்டார்.

No comments