Header Ads

சேலம்கடைவீதியில் செயல்பட்டு வரும் மீனாட்சி அண்ட் மீனாட்சி என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் குடோனில் திடீரென நேற்று இரவு குடோனில் தீ பற்றி எரிந்தது.

சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் குடோனில் பயங்கர தீ விபத்து.... உயிரை துச்சம் என மதித்து முதல் தளத்திற்கு சென்று தீயை அணைக்க முயன்ற இஸ்லாமிய இளைஞர்கள்..


சேலம்
கடைவீதியில் செயல்பட்டு வரும் மீனாட்சி அண்ட் மீனாட்சி என்ற 
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் 
குடோனில் திடீரென நேற்று இரவு குடோனில் தீ பற்றி எரிந்தது.


இதில் 4000 சதுர அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாஷிங் மெஷின் மிக்ஸி ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் முழுவதும் எரிந்தது. தீயை அணைக்கும் முயற்சியில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வந்தனர்.


இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் முடிந்த நிலையில் மீண்டும் தண்ணீர் எடுக்க வாகனம் சென்ற தீயணைப்புத் துறையினர், கடையின் வெளிப்புற பகுதிகளில் மட்டுமே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் தீ அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வந்தனர்.


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கடையின் முதல் தளத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் அங்கு சென்று தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது உயிரை துச்சம் என மதித்து செல்போன் டார்ச் உதவியுடன் குடங்களிலும் பக்கெட் களிலும் தண்ணீர் கேன்களிலும் தண்ணீரைக் கொண்டு சென்று முதல் தடத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது அந்த பகுதியினரிடையே வரவேற்பை பெற்றது.


இந்த விபத்தினால் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த சமூகம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments