சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு பிரிவு சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து ஜெயலலிதாவை வாழ்த்தி கோசங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Post a Comment