Header Ads

44 வது கோட்டத்திற்கு உட்பட்ட சுண்ணாம்பு சூலை பகுதியில் ரூபாய் 1 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சின்டெக்ஸ் டேங்க் மற்றும் மின் மோட்டார் அமைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

சேலம் மாநகராட்சி 44 வது கோட்டத்தில் போற்றதலுக்குரிய எழுச்சித்தமிழர் ஆனைப்படி சேலம் மத்திய  மாவட்ட திமுக செயலாளரும் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர்  இராஜேந்திரன் உத்தரவுப்படி  எருமாபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள மேல்நிலை உயர்த்திக்க தொட்டியில் பணியாற்றும் இரண்டு இரவு நேர காவலர்கள் குடியிருப்பு ரூபாய்  50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.


இதே போல 44 வது கோட்டத்திற்கு உட்பட்ட சுண்ணாம்பு சூலை பகுதியில்  ரூபாய் 1 லட்சம் மதிப்பீட்டில்  புதிதாக சின்டெக்ஸ் டேங்க் மற்றும் மின் மோட்டார் அமைத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. 


நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் திரு. ராமச்சந்திரன் மற்றும் 44 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஜெ.மு.இமயவரம்பன் மற்றும் வார்டு குழு உறுப்பினர்கள் பொன்னேஸ்வரி, M.செந்தில்,  தேவிபாலன்,  வரதன்,  சௌ.சதீஸ், மோகன்ராஜ்  முருகேசன்,  O.s பாபு,  அம்மாபேட்டை  மண்டலக்குவுத்தலைவர் திரு. தனசேகரன் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

No comments