தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தின் கீழ் அமைப்பாளர்கள் உதவியாளர்கள் சமையலற்கள் உள்ளிட்டோர்களும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிய அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் . ஓய்வு பெற்ற நிலையில் உள்ளனர். அவர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வில்லை இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு தேர்தல் கால வாக்குறுதியில் திமுக அரசு கூறியது போல் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மாதம் 7850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் அகவிலைப்படி மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு பென்ஷன் என்ற வஞ்சக அரசாணையை மாற்றி சத்துணவு அங்கன்வாடி ஓவியர் பென்ஷன் திட்டம் என்று அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வடிவேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Post a Comment