Header Ads

இன்று கடைசி… பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிட்டீர்களா?..

இன்று கடைசி… பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிட்டீர்களா?.. இல்லைன்னா இவ்வளவு அபராதம்..பான் - ஆதார் லிங்க் செய்ய கடைசி நாள்ஆதார் கார்டையும், பான்கார்டையும் இணைக்க மார்ச்-31-ஆம் தேதி( இன்று ) கடைசியாகும், இல்லாவிட்டார் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோர் பான்கார்டு, ஆதார் கார்டை இணைத்தால் இ-ரிட்டனை விரைவாக பரிசோதிக்க உதவும். பான் கார்டு என்பது தனிமனிதனின் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிதி மோசடிகளைத் தடுக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இதை வெறும் அடையாள அட்டையாக மட்டும் நினைக்கக் கூடாது. பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை செய்யும் போதோ, நகை வாங்கும்போதோ பான் கார்டு விவரங்கள் வழங்கப்பட வேண்டும். PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மார்ச் 31, 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2022 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்பட்டுவிடும். இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT ஆல் அறிவிக்கப்பட்டது. ஒரு வேளை, நீங்கள் மார்ச் 31, 2022 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை. வருமான வரித்துறை சட்டம் 272B பிரிவின் படி, பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும், செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை என்னும் போது, நீங்கள் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும். இந்த கால அவகாசம் நாளை ஒருநாளோடு முடிவடைகிறது. அதற்குள் இணைத்துவிட்டால் நல்லது.

No comments