Header Ads

பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்.

பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 
காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்...

 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...
தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக மார் தட்டி கொள்ளும் முதலமைச்சர் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என ஜோக்டோ ஜியோ கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்...

அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை பெறுதல் மற்றும் சரண் ஒப்படைப்பு உரிமையை மீண்டும் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற வருகிறது 

அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சேலம் மாவட்டத்திலிருந்து 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வின்சென்ட் பால்ராஜ், தமிழகத்தில் மீண்டும் கலைஞரின் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையிலேயே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் தற்போது தங்களின் நம்பிக்கை பொய்யாகும் வகையிலேயே ஆட்சி நடைபெற்று வருவதாக வேதனை தெரிவித்தார். மேலும் தேர்தல் வாக்குறுதியில் 85 சதவிகிதம் நிறைவேற்றி விட்டதாக மார்தட்டி கொள்ளும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என்ற அவர், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.

No comments