சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடரும் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர விழிப்புணர்வு.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடரும் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர விழிப்புணர்வு
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடரும் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில் இத்திட்டத்தின் மூலம் 54 பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 719 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மணக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உணவின் தரம் மற்றும் மாணவர்கள் உணவருந்த ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கீதா ஜீவன், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் மாணவர்களின் கல்வித் திறன், வருகை, ஊட்டச்சத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடந்து வருவதாகவும், இதனை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் தற்போது திருமணத்திற்கு முன்பே தொடர்புடைய உதவி எண்ணுக்கு அதிகளவில் அழைப்புகள் வருவதாக தெரிவித்த அவர், திருமணம் நடந்து முடிந்த புகார்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Post a Comment