சேலம் 44.வது வார்டில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடையை கையால் அள்ளும் அவலம்.
சேலம் 44.வது வார்டில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடையை கையால் அள்ளும் அவலம்...... யாருக்கும் தெரியாமல் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்தனர்......
ஊரே பார்க்க அதே மலம் கலந்த சாக்கடையை கையால் அள்ளும் அவலம் சேலத்தில் அரங்கேறி உள்ளது.
60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. இந்த 60 கோட்டங்களிலும் சேகாரமாகும் குப்பைகளை நாள்தோறும் சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் சேகரித்து அதனை சேலம் மாநகரில் நான்கு பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட மையத்திற்கு கொண்டு சேர்க்கின்றனர்.
அப்படி பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை காலுறை குப்பைகளை அல்ல தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை சேலம் மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். ஆனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உபகரணங்களை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கியதா என்பது தற்போது சேலத்தில் நிகழ்ந்துள்ள இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகராட்சியின் 44வது கூட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருவர் கையுறையில்லாமலும் கால் உரையில்லாமலும் எந்த ஒரு உயிர் பாதுகாப்பு கவசமும் இல்லாமல் மலம் கலந்த சாக்கடையை தங்கள் கைகளால் அள்ளிக் கொட்டிய அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அந்தப் பகுதிகளில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் வாகன ஓட்டிகள் இடையே முகச்சுளைப்பையும் ஒரு விதமான தர்ம சங்கடத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று எந்தவிதமான பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கைகளால் மலம் கழிந்த சாக்கடையை அல்லும் அவலத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் சேலம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்களிலும் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி குறிப்பாக கையுறை காலுறை இவற்றை அணிந்து துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகிறார்களா என்று நாள்தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பது மட்டுமே சேலம் மாநகர மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒருவேளை சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் கையுறைகள் காலுறைகள் உயிர் பாதுகாப்பு கவசங்கள் வழங்கி இருந்தால் இந்த இரண்டு துப்புரவு பணியாளர்களும் ஏன் வெறும் காலாலும் கைகளாலும் கழிவுகளை அல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பணிமனை உரிமையாளர் காஜா மைதீன் என்பவர் கூறுகையில், தற்போதைய காலகட்டத்திலும் எவ்வளவு பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் இதுபோன்று எந்தவிதமான உயிர் பாதுகாப்பு கவசமும் இல்லாமல் வெறும் காலால் சாக்கடையில் இறங்கியதோடு மட்டுமல்லாமல் வெறும் கையில் மலம் கலந்த சாக்கடையை அல்லியது வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் இது குறித்து அங்கிருந்து அதிகாரியிடம் கேட்டபோது சாக்கடையை கையில் அல்லாமல் வேறு எதில் அழுவது என்று திமிராக பதில் கூறியது வேதனையின் உச்சம் என்றும் இது போன்றவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த அவல நிலை குறித்து சம்பந்தப்பட்ட 44வது மாமன்ற உறுப்பினர் இமையவரம்பனிடம் கேட்டபோது, இந்த பகுதியில் புதிதாக சாக்கடை அமைப்பதற்காக ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சில காலமாக பணியை நிறுத்தி விட்டு தற்பொழுது இந்த பணியை தொடர்ந்து உள்ளார் என்றும் எந்த விதமான பாதுகாப்பு கவசமும் இல்லாமல் சாக்கடை அள்ளியது சேர மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் அல்ல என்று திட்டவட்டமாக மறுத்து அவர் இது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் பணியாளர்கள் என்று தெரிவித்தார்.
மேலும் இது போன்ற அவலங்களை தனது கோட்டப்பகுதியில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய இமயவரம்பன், அதுவும் தனது இல்லம் அருகே இது போன்ற அவலம் நடந்திருப்பது நான் எப்படி அனுமதிப்பேன் என்றும் இது வேதனையாக உள்ளது என்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இது போக சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து நாள்தோறும் பணியாற்றுகிறார்களா என்று சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று வரும் இயல்பு கூட்டத்தில் தீர்மானம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அவலத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதா இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்துவதா? அல்லது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதா என்பது சேலம் மாநகர மக்களின் கேள்வியாகவே உள்ளது.
Post a Comment