Header Ads

சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 4-வது கூட்டம் குழுவின் தலைவர் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 4-வது கூட்டம் குழுவின் தலைவர் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் அனைத்து குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் 
நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேலம் சென்னை விமான சேவையை உடனடியாக மீண்டும் துவங்குவதற்கு சேலம் பாராளுமன்ற உறுப்பினரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் தலைவருமான மாண்புமிகு எஸ்.ஆர். பார்த்திபன் அவர்கள் கடந்த 03.01.2022-ம் தேதி பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்ததன் பேரில் மத்திய ஒன்றிய விமான அமைச்சகம் மார்ச் 3-வது வாரத்தில் சேலம் சென்னை விமான போக்குவரத்து துவங்கப்படும் என கூறப்பட்டது. அதன் பின்பும் 2 முறை பாராளுமன்றத்தில் பேசியும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சரை கடந்த 05.08.2022-ம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை மனு வைத்தும் இதுவரை சேலம் சென்னை விமான சேவை துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததற்கு இந்த கூட்டம் வருத்தம் தெரிவிப்பதோடு போர்க்கால அடிப்படையில் மீண்டும் சேலம் சென்னை விமான சேவை துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தை கேட்டுக் கொண்டு இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட டது.

சேலம் விமான நிலையத்தில் கூடி.தலாக விமானங்கள் நிற்பதற்கு Parking Bay மற்றும் Grading ஏற்படுத்த வேண்டுமென கடந்த 16.02.2021-ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய விமான போக்குவரத்து துறை 7.5 கோடி மதிப்பீட்டில் திட்டத்தினை நிறைவேற்ற ஒப்பந்த புள்ளி முடிவடைந்து தற்பொழுது பணிகள் நடைபெற்ற வருகிறது. இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கும், இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

பனிமூட்டம் உள்ள காலங்களில் விமானம் இறங்குவதற்கு ஏதுவாக (DVOR) என்கிற நவீன இயந்திரத்தை பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 3 குழுவின் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அதற்கான நடவடிக்கையில் துரிதமாக இறங்கவில்லை. எனவே (DVOR) நவீன இயந்திரம் பொருத்துவதற்கு விரைந்து பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

சேலம் விமான போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் கீழ்க்கண்ட விமான சேவைகளை கீழ்க்கண்ட வழித்தடங்களில் இந்திய விமான போக்குவரத்துத்துறை துவங்குவதற்கு சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருணணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்களின் பயன்பாட்டிற்கும், தொழிற்சாலைகள், பொறியியற்கல்லூரிகள், உயர்தர பள்ளி நிறுவனங்களைச் சார்ந்தவர்களின் பயன்பாட்டிற்கும் இதுபோன்ற பலதரப்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை போர்கால அடிப்படையில் நிறைவேற்றிட இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சேலத்திலிருந்து திருப்பதி வழியாக ஹைதராபாத்துக்கும் 11) சேலத்திலிருந்து கொச்சினுக்கும்

IV) சேலத்திலிருந்து ஹைதராபாத் (அ) சென்னை வழியாக சீரடிக்கும் சேலத்திலிருந்து மங்களூர் வழியாக சுற்றுலா தலமான கோவாவிற்கும்,

மேற்படி வழித்தடங்களில் விமான சேவைகளை மேற்படி ஐந்து மாவட்ட மக்களின் கோரிக்கைைைய விரைந்து நிறைவேற்றிட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்திய விமான போக்குவரத்து துறை புதிதாக உருவாக்க உள்ள உதான் நான்கு திட்டத்தின் கீழ், 

பெங்களூரிலிருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கும்.

புதுச்சேரியிலிருந்து சேலம் வழியாக பெங்களூருக்கும்

செயல்படுத்த இருந்த விமான சேவையை உடனடியாக அமுல்படுத்திட இந்த கூட்டத்தில்

கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இந்தியாவில் பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு விமானநிலையங்கள் இருந்த போதிலும் சேலம் விமான நிலையத்தில் விமான ஓட்டுநர் (Pilot) பயிற்சி பள்ளி ஏற்படுத்த பூர்வாங்க பணிகள் மேற்கொண்டுள்ள இந்திய மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கும், விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கும் இந்த ஆலோசனை கூட்டத்தின் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சேலத்திலிருந்து இரவு நேர விமான சேவை துவங்குவதற்கும், அதற்கான பூர்வாங்கப் பணிகளை உடனடியாக துவங்குவதற்கும் இந்திய விமான போக்குவரத்து துறை துரித நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சேலம் விமான நிலையத்திலிருந்து இரவு நேர விமான சேவை துவங்குவதற்கு முன்பு, விமான பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு மாலை நேர விமான சேவையை சென்னைக்கு துவங்க உடனடி நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 16.02.2021-ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட சேலம் விமான நிலைத்தில் பயணிகள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் பயன்பெறும் வகையில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று ஒன்றிய விமான அமைச்சகம் ரூ. 35 இலட்சம் ஒதுக்கீடு செய்து தற்பொழுது பணிகள் நிறைவடைந்து பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கும்,இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.


இக்கூட்டத்தில் சேலம் விமான நிலைய இயக்குனர் ரமேஷ், மேட்டூர் RDO ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர்,
ஓமலூர் காவல் ஆய்வாளர்,விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அழகரசன்,பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments