Header Ads

வாழப்பாடி அருகே 2 கிராமங்களில் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு வனத்துறையினர் விசாரணை.

பொங்கல் பண்டிகையை யொட்டி, காளைகளை கொண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது போல், சேலம் மாவட்டம் வாழப்பாடி ஆத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.



 விவசாயம் செழிக்கவும், நோய், நொடிகள் வராமல் இருக்கவும். இத்தகைய ஜல்லிக்கட்டை நடத்துவதாக இந்த மக்களின் ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் ஊர் மக்கள் ஒன்று இணைந்து இந்த வங்கா நரி ஜல்லிக்கட்டை நடத்துவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்

இதற்காக பொங்கல் பண்டிகை முடிந்ததும் காட்டிற்குள் சென்று வங்கா நரியை வலை விரித்து பிடித்து வருவார்கள். பின் னர், ஊரில் உள்ள கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு நடத்தி, வங்கா நரியை ஓட விட்டு ஜல்லிக்கட்டு நடத்துவார்கள்.

நடப்பாண்டு வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமத்தினர் முடிவெடுத்திருப்பதை அறிந்த வனத்துறையினர்வங்கா நரியை பிடித்து வருவது வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி குற்றம் எனவும், யாராவது தடையை மீறி நரியை பிடித்து வந்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்த்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்

பொங்கல் பண்டிகை முடிந்து 2 நாள் ஆன நிலையில் நேற்று கொட்டவாடியில் சென்று இளைஞர்கள் நரியை பிடித்து கூண்டில் அடைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக தூக்கி வந்தனர் அப்போது பெண்கள் வங்காளவிக்கு தீபாவதனை காட்டி தேங்காய் பழம் உடைத்து வரவேற்பு தெரிவித்ததோடு ஊர் பொதுமக்கள் நடனமாடி வந்ததால் ஊர் முழுவதும் விழா கோலமாக காட்சி அளித்தது. இதேபோல் சின்னம்மநாயக்கன்பாளையத்திலும் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்றது அந்த பதியை சேர்ந்த மக்கள் கொட்டவடைக்குச் சென்று வனப்பகுதியில் நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

 இதையறிந்த வன சரகர் துரைமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் மேலும் நரிகளை பிடித்து வந்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி இரண்டு கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்ற சம்பவம் அதிகரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments