Header Ads

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்காண இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு .

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்காண இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்..1-1 2023 தகுதி ஏற்ப நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும்படி கடந்த 9 -11-22 முதல் 8- 12- 2022 வரை நடைபெற்றது



 இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது இதன்படி சேலம் மாவட்டத்தில் மொத்தம் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் உள்ளனர் ஆண் வாக்காளர்கள் 14,73,024 பேரும் பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 87 ஆயிரத்து 294 பேரும் இதர வாக்காளர்கள் 275 பேர் என மொத்தம் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 பேர் வாக்காளராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

 வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளனர் சேலம் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 370 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது 67027 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டும் உள்ளதாக மாவட்ட ஆட்சித் தெரிவித்தார் வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 45 ஆயிரத்து 880 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தெரிவித்தார்

 பட்டியலில் பெயர் சேர்த்தல் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் நகராட்சி மாநகராட்சி அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவுகளை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

No comments