Header Ads

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு..

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு.. நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு ..

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் நடைபாதை கடைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் நடைபாதைகளில் அதிக அளவில் கடைகள் இருப்பதால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயருக்கு புகார் வந்ததையடுத்து சேலம் மாநகராட்சிமேயர் ராமச்சந்திரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்

 அப்போது நடைபாதையில் அதிகளவு ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதனையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் வைக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு அதற்காக வழங்கப்பட்ட அனுமதிக்குமாராக கடைகள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதா மேலும் ஆக்ரமிப்பில் உள்ள பழக்கடைகள் பூக்கடைகள் மற்றும் உணவுகங்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்

 மேலும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமானதா சுகாதாரமானதா உள்ளது என்பதை ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments