அரசு பேருந்து மோதி இறந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் , சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் மூன்று அரசு பேருந்துகள் ஜப்தி.
அரசு பேருந்து மோதி இறந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் , சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் மூன்று அரசு பேருந்துகள் ஜப்தி....
சேலம் மாநகரம் , கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் பாரத ஸ்டேட் வங்கி , தர்மபுரி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து , தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லம்பள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது , பின்புறமாக வந்த அரசு பேருந்து ஒன்று இவர் மீது மோதியது. இதில் பொன்னுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மனைவி ஜீவா மற்றும் ரெண்டு குழந்தைகள் சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பொன்னுசாமியின் குடும்பத்திற்கு 45 லட்சம் இழப்பீடு தொகையும் , வட்டியுடன் சேர்த்து 60 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இதுவரை பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்தது். இதையடுத்து நிறைவேற்றும் மனுவை மனைவி ஜீவா தாக்கல் செய்தார். இதனை விசாரித்து , சேலம் சிறப்பு நீதிமன்றம் 9 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று நீதிமன்ற அமீனா ஜோசப் மற்றும் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம் மோகன்ராம் ஆகியோர் சேலம் மத்திய பேருந்து நிலையம் வந்து , முதல் கட்டமாக கரூர் , குமுளி பகுதிகளுக்கு செல்லும் மூன்று அரசு பேருந்துகளை ஜப்தி செய்தனர் . அவர்களிடம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment