புதிதாக கலை கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் சேலம் அன்புமணி தம்பிகள் படை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன
புதிதாக கலை கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் சேலம் அன்புமணி தம்பிகள் படை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன
சேலம் வடக்கு மாவட்ட அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயற்குழு கூட்டம் வாழப்பாடி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது
அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விஜய ராசா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்
கூட்டத்தின் போது அன்புமணி தம்பிகள் படையினர் மிகுந்த ஒழுக்கத்தோடு செயல்பட்டு கட்சி கொள்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய வாழப்பாடி பகுதியில் மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி உடனடியாக அமைத்து தர தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என்றும் சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் சுகாதார சீர்கேடு நிறைந்த பேருந்து நிலையத்தை புதுப்பித்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன
இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் முருகேசன் அமைப்பு தலைவர் ராஜமூர்த்தி அமைப்பு செயலாளர் செல்வம் வன்னியர் சங்க செயலாளர் பாண்டியன் உழவர் பேரியக்க செயலாளர் முருகன் துணைத்தலைவர்கள் பாஸ்கர் முருகேசன் அசோக்குமார் அன்புமணி தங்கைகள் படை செயலாளர் சிவரஞ்சனி மகளிர் சங்க செயலாளர் மணிமேகலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்
கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட அன்புமணி தம்பிகள் படை இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Post a Comment