தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிரழிந்து விட்டதுடன், போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிரழிந்து விட்டதுடன், போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்
அப்போது, தமிழக முதல்வர் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக தமிழகத்தை சீரழித்து விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். அதனால் சில விளக்கங்களை கொடுப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, அகல பாதாளத்தில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை மீட்டெடுத்து தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றதாகவும், சட்ட ஒழுங்கு முறையாக செயல்படுத்தப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், தற்போது தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், 36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடந்த வண்ணம் சட்ட ஒழுங்கு முற்றிலும் இல்லாத தமிழகமாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 பேர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதை பொருள் விற்பதாக கண்டறிக்கப்பட்ட நிலையில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பது ஏன்? மற்றவர்கள் கைது செய்யப்படாததற்கு ஆளுங்கட்சியின் பின்னணி உள்ளவர்கள் அவர்களின் அழுத்தம் காரணமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குதாகவும் தெரிவித்தார்.
Post a Comment