Header Ads

சேலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சேலம் புத்தகத் திருவிழாவை சேலத்தை அடுத்துள்ள நாழிக்கள்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியருடன் ஆர்வத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

புத்தகத்தில் உலகத்தை படிப்போம், உலகத்தையே புத்தகமாக படிப்போம் என்ற தலைப்பில் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா 2022 என்ற பெயரில், கடந்த 22 ஆம் தேதி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் மாநகராட்சி திடலில் தொடங்கியது.


சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே நேரு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்து நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.


நாள்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இதே போல பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.


தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்களின் சிந்தனை அரங்கமும் இந்த புத்தகத் திருவிழாவில் நடைபெறுகின்றன இந்த புத்தகத் திருவிழாவில்.


இந்த நிலையில் 26 ஆம் தேதியான இன்று சேலத்தை அடுத்துள்ள நாழிக்கல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்களுடன் சேலம் மாவட்ட புத்தகத் திருவிழாவை ஆர்வத்துடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர். புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றிருக்கும் அரங்குகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வரலாற்று சிறப்புமிக்க புத்தகங்களையும் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு அதனை சிறிது நேரம் படித்து பார்த்தும் தங்களது அறிவு திறமையை மேம்படுத்திக் கொள்ள புத்தகத்தை வாங்கி சென்றனர்.


இந்த புத்தகத் திருவிழாவைப் பொறுத்தவரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இலவச அனுமதியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


என்றாலும் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவானது பொது மக்களிடையேயும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இடையேயும் மிகவும் வரவேற்புரை பெற்றுள்ளதால் நாள்தோறும் லட்ச கணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்வதாக தகவல்களும் வெளியாகி உள்ளன.

No comments