Header Ads

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் குழந்தைகள் குறை பிரசவமாக பிறக்கின்றன உலக குறை பிரசவ தினத்தையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் பிரபல மருத்துவர் தகவல்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் குழந்தைகள் குறை பிரசவமாக பிறக்கின்றன உலக குறை பிரசவ தினத்தையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் பிரபல மருத்துவர் தகவல்.


உலக குறை பிரசவ தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது இதனையொட்டிதனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறும்போது உலகெங்கிலும் குறை குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளவும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது

இதன் அடிப்படையில் எஸ் கே எஸ் மருத்துவமனையில் பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பட செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் உலகம் முழுவதும் குறை பிரசவம் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார பிரச்சனையாக இருக்கிறது காரணம் குறைமாதத்தில் பிறக்கும் சிசு பிறந்த முதல் 28 நாட்களுக்கு மரணம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது அவ்வாறுஉயிருடன் இருக்கும் ஒரு சில குறைமாத குழந்தைகளுக்கு பிற்காலத்தில் உடல் ஊனம் ஏற்படலாம். வாதம் உணர்வு கற்கும் திறன் பார்வைக் கோளாறு காதுகள் போன்ற குறைபாடுகள் வரலாம் என்றும் பொதுவாக பிரசவ காலம் 40 வாரங்கள் ஆகும் 37 வாரங்கள் முழுமையாக பெறுவதற்கு முன் உயிருடன் பிறந்த குழந்தைகளே குறை பிரசவ குழந்தைகள் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளதாக தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 15 கோடி குறைவு நிகழ்கின்றன பிறக்கும் 10 குழந்தைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைப்பிரசவமாக பிறக்கின்றன என்றார் 

10 லட்சம் குழந்தைகள் குறைபிரசவத்தினால் ஏற்படும் சிக்கல்களினால் மரணம் அடைகின்றன என்று தெரிவித்தவவர் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் குழந்தைகள் குறைப்பிரசவமாக பிறப்பதாக தெரிவித்தார்

 உலக அளவில் சிசு மரணத்தின் முக்கிய பங்கு குறை பிரசவமே என்றும் மேலும் நிமோனியாவுக்கு அடுத்தபடியாக ஐந்து வயது குட்பட்ட குழந்தைகள் மரணத்தின் இரண்டாவது முக்கிய காரணமும் இதுவே என்றார்

 இந்தியாவிலேயே மிக அதிநவீன வசனம் கூடிய பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு சிகிச்சை மையம் சேலம் எஸ் கே எஸ் மருத்துவமனையில் தான் நிறுவப்பட்டுள்ளதாகவும் 

இதன் மூலம் மிகக் குறைந்த எடை உள்ள குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டு தொடர்ந்து மூன்று வருடம் அவர்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதாரமான குழந்தையாக உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார் 

 பேட்டின் போது மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுரேஷ் விஸ்வநாதன் குழந்தைகள் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் முதன்மை செயல் அலுவலர் சிற்பி மணி ஆகியோர் உடன் இருந்தனர்

No comments