Header Ads

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 185000 கன அடியாக அதிகரிப்பு.. காவேரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 185000 கன அடியாக அதிகரிப்பு.. காவேரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை


காவிரி கர்நாடகா பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் கர்நாடகா அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது நீர் வரத்து தற்போது 1லட்சத்து85 ஆயிரம் கன அடியாக உள்ளது அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்ற பட்டு வருகிறது இதன் அடிப்படையில் உபநீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு லட்சத்து 85000 ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவேரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் மேட்டூர் அணை மின் நிலையம் வழியாக 21,500 கனஅடியும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் வெளியிடப்பட்டு வருகிறது காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ புகைப்படம் எடுக்க கூடாது என்றும் ஆற்றங்கரை யோரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments