சேலத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபம் மகா கும்பாபிஷக விழா தொடங்கியது.
சேலத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபம் மகா கும்பாபிஷக விழா தொடங்கியது. - தய்யம் ஊர்வலத்துடன் நூற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து பிரமாண்ட பேரணி
நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோவில் முன்பிருந்து தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் தொடங்கியது. தொடர்ந்து
1008 தீர்த்த குடங்களுக்கு வரசித்தி விநாயகர் கோவிலில் உரிய பூஜைகள் நடத்தப்பட்டு தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கேரள செண்டை மேளத் தாளம் முழங்க தய்யம் ஊர்வலம் நடைபெற்றது. சிவன், பார்வதி, முருகர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட கடவுள் வேடங்களை தரித்தபடி பக்தர்கள் நடனம் ஆடியபடி தய்யம் ஊர்வலமாக வந்தத பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் பாரம்பரிய சிலம்பக் கலையை போற்றிடும் வகையில், மாணவர்கள் சிலம்பம் ஆடிய படி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேலும், பசு மற்றும் குதிரையுடன் முளைப்பாரி ஊர்வலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.ஊர்வலம் வரசித்தி விநாயகர் கோவில் முன்பு தொடங்கி திருவகவுண்டனூர் ஜங்ஷன் பிரதான சாலை வழியாக முல்லைநகர் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் நிறைவடைந்தது
Post a Comment